முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளை கிழங்கு ரோஸ்ட் ப்ரை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

உருளை கிழங்கு ரோஸ்ட் ப்ரை செய்யத் தேவையான பொருட்கள். 

 1. சிக்கன் - 100 கிராம்.
 2. சீஸ் - 200 கிராம்.
 3. உருளைக்கிழங்கு - 3.
 4. முட்டை - 3.
 5. கார்ன் பிளார் மாவு - 3 ஸ்பூன்.
 6. எண்ணெய் - 3 ஸ்பூன்.
 7. மஞ்சள் தூள் - சிறிதளவு.
 8. மிளகு தூள் -2 ஸ்பூன்.
 9. இஞ்சிதூள் -1/2 ஸ்பூன்.
 10. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
 11. பொடியாக நறுக்கியமல்லி இலை - சிறிதளவு.
 12. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

 

செய்முறை ;--

 1. அடுப்பில் கடாயை வைத்து ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி 100 கிராம் சிக்கனை போடவும்.
 2. இதனுடன்  சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு கலந்து விட்டு கடாயை மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் சிக்கனை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு தட்டில் 3 உருளைக்கிழங்கை எடுத்து அதை தோல் சீவி துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
 4. இதனுடன் வேக வைத்த சிக்கனையும் துருவி போடவும்.
 5. ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை  உடைத்து ஊற்றி நன்றாக கலந்து அதை சிக்கன் மற்றும் உருளைக்கிழங்கு கலவை உள்ள பாத்திரத்தில் ஊற்றி கலந்து விடவும்.
 6. இதனுடன் 3 ஸ்பூன் கார்ன் பிளார் மாவு,மிளகு தூள்  2 ஸ்பூன்,இஞ்சிதூள் 1/2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 4 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய மல்லி இலை சிறிதளவு மற்றும் தேவையான  அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
 7. இதனுடன் 200 கிராம் சீஸை துருவி போட்டு நன்றாக கலந்து விடவும்.
 8. அடுப்பில் கடாய் வைத்து 3  ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
 9. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள  கலவையை எண்ணெயில் ஊற்றி  பொரிக்கவும்.
 10. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறிக்கவும்.
 11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
 12. சுவையான உருளை கிழங்கு ரோஸ்ட் ப்ரை ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்