முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

காலிபிளவர் ரோஸ்ட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

காலிபிளவர் ரோஸ்ட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1. காலிபிளவர் – 2.
  2. முட்டை – 3.
  3. இஞ்சி பவுடர் - ஒரு ஸ்பூன்.
  4. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  5. சாட் மசாலா - 1/2 ஸ்பூன்.
  6. தயிர் - 5 ஸ்பூன்.
  7. கார்ன் பிளவர் மாவு - 20 கிராம்.
  8. எண்ணெய் - ஒரு கரண்டி
  9. உப்பு தேவையான - அளவு.
Method: 

செய்முறை ;--  

  1. 2 காலிபிளவரை எடுத்து சுத்தம் செய்து பாதியாக நறுக்கி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 3 டம்ளர்  தண்ணீர் ஊற்றி கொள்ளவும், தண்ணீர் சூடானவுடன்  சிறிதளவு  உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
  3. நறுக்கி வைத்துள்ள காலிபிளவரை போட்டு பாத்திரத்தை மூடி போட்டு மூடி 5 நிமிடம் காலிபிளவரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  4. 5 நிமிடம் கழித்து வேக வைத்த காலிபிளவரை ஒரு  பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். 
  5. ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றவும்,இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. இதனுடன் மிளகு தூள் 1/2 ஸ்பூன், சாட் மசாலா 1/2 ஸ்பூன்,தயிர் 5 ஸ்பூன் மற்றும் 20 கிராம் கார்ன் பிளவர் மாவை போட்டு நன்றாக கலந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. வேக வைத்து காலிபிளவரை எடுத்து மாவு கலவையில் போட்டு நன்றாக பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  8. இதே போல் மீதம் உள்ள காலிபிளவரையும் தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து ஒரு கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்,
  10. எண்ணெய்  சூடானவுடன் மாவு கலவையில் போட்டு  பிரட்டி எடுத்து வைத்துள்ள காலிபிளவரை எண்ணெய்யில் போட்டு நன்றாக பொரிக்கவும்.
  11. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைக்கவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான காலிபிளவர் ரோஸ்ட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago