முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

டிராகன் சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

டிராகன் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் - 1/2 கிலோ.
  2. முந்திரி பருப்பு - 40.
  3. முட்டை - 1.
  4. பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு ஸ்பூன்.
  5. பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
  6. நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - 6.
  7. மைதா மாவு - 2 ஸ்பூன்.
  8. கான் பிளவர் மாவு - ஒரு ஸ்பூன்.
  9. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
  10. எலுமிச்சம்பழம் - 1/2.
  11. மிளகாய் வத்தல் - 5.
  12. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1.
  13. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  14. ரெட் சில்லி சாஸ் - 2 ஸ்பூன்.
  15. எண்ணெய் - சிறிதளவு.
  16. உப்பு -தேவையான - அளவு.
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் நீளமாக நறுக்கிய ½ கிலோ சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் மைதா மாவு,ஒரு ஸ்பூன் கான் பிளவர் மாவு,1/2 ஸ்பூன் மிளகு தூள், சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு இதனுடன் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  3. சிக்கன்  உள்ள பாத்திரத்தில் தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையை ஊற்றி இதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சம் பழ சாறை  ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய்  சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை  ஒவ்வொன்றாக  எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய்  சூடானவுடன் பொடியாக நறுக்கிய 15 முந்திரி பருப்பு, நறுக்கிய மிளகாய் வத்தல் 5,மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  9. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,2 ஸ்பூன் ரெட் சில்லி சாஸ், 25 முந்திரி பருப்பு,நீளமாக நறுக்கிய 6 குடைமிளகாய்,பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன்வெங்காயத்தாள், மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
  10. இதனுடன் பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான டிராகன் சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்