முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

டிராகன் பன்னீர்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

டிராகன் பன்னீர் செய்யத் தேவையான பொருட்கள்.

பன்னீர் - 300 கிராம்.

கான் பிளவர் மாவு - 3 ஸ்பூன்.

மைதா மாவு - 2 ஸ்பூன்.

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.

சோயா சாஸ் - 2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

எண்ணெய் - 1/2 லிட்டர்.

மிளகாய் வத்தல் - 3.

முந்திரி பருப்பு - 5.

இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.

நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4.

செஸ்வான் சாஸ் - ஒரு ஸ்பூன்.

நீளமாக நறுக்கிய சிகப்பு குடைமிளகாய் - 1/2.

நீளமாக நறுக்கிய பச்சை குடைமிளகாய் -1/2.

பொடியாக நறுக்கிய தக்காளி - 1.

ரெட் சில்லி சாஸ் - ஒரு ஸ்பூன்.

எழுமிச்சம்பழம் - 1.

சர்க்கரை - 1 ஸ்பூன்.

பொடியாக நறுக்கிய மல்லி இலை - சிறிதளவு.

டொமேடோ சாஸ் - 1 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

 

 

Method: 

 

செய்முறை ;--

 

ஒரு பாத்திரத்தில் 300 கிராம் பன்னீரை  நீளமாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு பவுலில் 3 ஸ்பூன் கான் பிளவர் மாவு,2 ஸ்பூன் மைதா மாவு,மிளகு தூள் 1/2 ஸ்பூன்,சோயா சாஸ் 2 ஸ்பூன்,மிளகாய் தூள் 2 ஸ்பூன்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு,நீளமாக நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய்  சூடானவுடன் மசாலா கலந்து தயார் செய்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை  ஒவ்வொன்றாக  எண்ணெயில் போட்டு பொறிக்கவும்.

திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.

எண்ணெய்  சூடானவுடன் 3 மிளகாய் வத்தல்,5 முந்திரி பருப்பு,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

இதனுடன் நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய்,செஸ்வான் சாஸ் ஒரு ஸ்பூன்,நீளமாக நறுக்கிய 1/2 சிகப்பு  குடைமிளகாய்,நீளமாக நறுக்கிய  1/2 பச்சை குடைமிளகாய், மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்,ஒரு ஸ்பூன் சோயா சாஸ் ஒரு ஸ்பூன்,ஒருஸ்பூன் ரெட் சில்லி சாஸ் மற்றும் ஒரு எலுமிச்சம்பழ சாறை ஊற்றி வதக்கவும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை,பொடியாக நறுக்கிய சிறிதளவு மல்லி இலை மற்றும் ஒரு  ஸ்பூன் டொமேடோ சாஸ் ஊற்றி நன்றாக வதக்கவும்.

இதனுடன் ஒரு ஸ்பூன் கான் பிளவர்மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி வதக்கவும்.

இதனுடன் எண்ணெயில் பொறித்த பன்னீர் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.

இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.

சுவையான பன்னீர் சிக்கன் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்