முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

புரோட்டீன் லட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

புரோட்டீன் லட்டு செய்யத் தேவையான பொருட்கள்.

 1. ஆளி விதை - 150 கிராம்.
 2. தேங்காய் – 1.
 3. நெய் - ஒரு ஸ்பூன்.
 4. முந்திரி பருப்பு -10 கிராம்.
 5. பாதாம் பருப்பு - 5.
 6. கருப்பு திராட்சை - 5 கிராம்.
 7. முளை கட்டிய பயறு - சிறிதளவு.
 8. விதை நீக்கிய பேரிச்சம் பழம் - 5.
 9. ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்.
 10. தேன் - சிறிதளவு.
 11. திராட்சை - 50 கிராம்.
 12. உப்பு - தேவையான அளவு.

 

Method: 

செய்முறை ;--

 1. அடுப்பில் கடாய் வைத்து 150 கிராம் ஆளி விதையை போட்டு நன்றாக வறுத்து சிறிது நேரம் ஆற வைத்து ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு  தேங்காயை எடுத்து துருவி தேங்காய் பூவை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
 3. அடுப்பில் கடாய் வைத்து தயார் செய்து வைத்துள்ள தேங்காய் துருவலை போட்டு இதனுடன் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி நன்றாக வதக்கி ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. அடுப்பில் கடாய் வைத்து 10 கிராம் முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு 5,கருப்பு திராட்சை  5 கிராம் ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 5. வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு,பாதாம் பருப்பு கருப்பு திராட்சை, சிறிதளவு முளை கட்டிய பயறு  மற்றும் விதை நீக்கிய 5 பேரிச்சம் பழத்தை ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 6. இதனுடன் வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவல் மற்றும் அரைத்து வைத்துள்ளஆளி விதை பொடியை போட்டு அரைக்கவும்.
 7. இதனுடன் ஒரு ஸ்பூன்ஏலக்காய் பொடி,உப்பு தேவையான அளவு,தேன் சிறிதளவு மற்றும் திராட்சை 50 கிராம் போட்டு அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
 8. இந்த கலவையை சிறிதளவு எடுத்து லட்டு உருட்டுவது போல் உருட்டி வைத்துக்கொள்ளவும்,இதை போல் எல்லா உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
 9. சுவையான புரோட்டீன் லட்டு ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்