முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பேபி கார்ன் சில்லி

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பேபி கார்ன் சில்லி செய்யத்தேவையான பொருட்கள்.

  1. பேபி கார்ன் -1/2 கிலோ.
  2. மைதா மாவு - 3 ஸ்பூன்.
  3. அரிசி மாவு - 2 ஸ்பூன்.
  4. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்.
  5. எண்ணெய் - 1/2 லிட்டர்.
  6. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4.
  7. பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு.
  8. பொடியாக நறுக்கிய பூண்டு - 4 பல்.
  9. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் -1.
  10. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1.
  11. சீரகத்தூள்  -  1/4 ஸ்பூன்.
  12. சோயா சாஸ் -  2 ஸ்பூன்.
  13. ரெட் சில்லி சாஸ் - 3 ஸ்பூன்.
  14. சோம்பு தூள் - 1/4 ஸ்பூன்.
  15. உப்பு - தேவையான - அளவு.

 

Method: 

 

செய்முறை ;-- 

  1. ஒரு தட்டில் 1/2 கிலோ பேபி கார்னை எடுத்துக்கொண்டு அதை நீளமான  துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை  வைத்து சிறிதளவு தண்ணீர்  ஊற்றி  நறுக்கிய 1/2 கிலோ பேபி கார்ன்  மற்றும் சிறிதளவு உப்பை  போட்டு கலந்து விட்டு  நன்றாக வேக வைத்து வடி கட்டி பேபி கார்னை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் மைதா மாவு 3 ஸ்பூன்,அரிசி மாவு 2 ஸ்பூன், ஒரு  சிட்டிகை மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 1/4 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள பேபி கார்னை போட்டு  பொரிக்கவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொறித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  8. எண்ணெய் சூடானவுடன் நீளமாக நறுக்கிய 4 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி,பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு பெரிய  வெங்காயம், மற்றும்
  9. பொடியாக நறுக்கிய ஒரு குடைமிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
  10. இதனுடன் சீரகத்தூள் 1/4 ஸ்பூன்,சோயா சாஸ் 2 ஸ்பூன்,ரெட் சில்லி சாஸ் 3 ஸ்பூன்,சோம்பு தூள் 1/4 ஸ்பூன்,மிளகு தூள் 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர்  ஊற்றி கலந்து விடவும்.
  11. இதனுடன் பொறித்து  வைத்துள்ள பேபி கார்னை  போட்டு நன்றாக  கிளறி விடவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான பேபி கார்ன் சில்லி ரெடி.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்