முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மேகி பால்ஸ்

Cooking time in minutes: 
20
Ingredients: 

மேகி பால்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. மேகி நூடுல்ஸ் - 3 பாக்கெட்.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  3. புதினா - சிறிதளவு.
  4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2.
  5. பொடியாக நறுக்கிய குடைமிளகாய் - 1/2..
  6. துருவிய கேரட் - 100 கிராம்.
  7. பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் - 150 கிராம்.
  8. மிளகாய்  தூள் - ஒரு ஸ்பூன்.
  9. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
  10. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  11. இஞ்சி,பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.
  12. நூடுல்ஸ் மசாலா பொடி - 1 பாக்கெட்.
  13. அரிசி மாவு - 2  ஸ்பூன். 
  14. கடலை  மாவு - 5 ஸ்பூன்.  
  15. வெஜிடபிள் ஆயில் - 3 ஸ்பூன். 
  16. மைதா மாவு - 5 ஸ்பூன்.  
  17. எண்ணெய் – 1/2 லிட்டர்.
  18. உப்பு - தேவையான அளவு.
Method: 
செய்முறை ;--
  1. அடுப்பில் குக்கரை   வைத்து 2 லிட்டர்  தண்ணீர்  ஊற்றவும்.
  2. தண்ணீர் சூடானவுடன் 2  பாக்கெட் மேகி நூடுல்சை  போட்டு  நன்றாக வேக வைத்து தண்ணீரை வடி கட்டி நூடுல்சை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம்,புதினா சிறிதளவு,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 1/2 குடைமிளகாய் துருவிய 100 கிராம் கேரட்,பொடியாக நறுக்கிய முட்டை கோஸ் 150 கிராம்,தேவையான  அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. இதனுடன் மிளகாய்  தூள் ஒரு ஸ்பூன்,மிளகு தூள் ஒரு ஸ்பூன்,கரம் மசாலா தூள் ஒரு ஸ்பூன்,இஞ்சி,பூண்டு விழுது ஒரு ஸ்பூன்,நூடுல்ஸ் மசாலா பொடி ஒரு பாக்கெட்,அரிசி மாவு  2   ஸ்பூன்,கடலை  மாவு 5  ஸ்பூன்,வெஜிடபிள் ஆயில்  3  ஸ்பூன் ஊற்றி   நன்றாக கலந்து கலவையை உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் 5  ஸ்பூன் மைதா மாவை போட்டு சிறிதளவு தண்ணீரை ஊற்றி   கலந்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு  பாக்கெட் மேகி நூடுல்சை எடுத்து அதை தூளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும்.
  7. உருட்டி வைத்துள்ள உருண்டைகளை மைதாமாவில் முக்கி எடுத்து பின்னர் நூடுல்ஸ் உள்ள பாத்திரத்தில் போட்டு உருண்டையின் எல்லா பக்கங்களிலும் நூடுல்ஸ் தூள்கள் ஒட்டும்படி உருட்டி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  8. இதே போல் மீதம் உள்ள உருண்டைகளையும் உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
  10. எண்ணெய்  சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள நூடுல்ஸ் உருண்டைகளை ஓவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.
  11. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
  12. சுவையான மேகி பால்ஸ் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago