முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ராகி பக்கோடா

Cooking time in minutes: 
20
Ingredients: 

ராகி பக்கோடா  செய்யத் தேவையான பொருட்கள்.

 1. கடலை பருப்பு - 100 கிராம்.
 2. நிலக்கடலை பருப்பு - 50 கிராம்.
 3. ராகி மாவு - 400 கிராம்.
 4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
 5. பெருங்காயத் தூள் - 1/2 ஸ்பூன்.
 6. சோம்பு - ஒரு ஸ்பூன்.
 7. மல்லி இலை - 2 ஸ்பூன்.
 8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
 9. கறிவேப்பிலை - சிறிதளவு.
 10. எண்ணெய் - 1/2 லிட்டர்.
 11. உப்பு - தேவையான அளவு.
Method: 
 1. செய்முறை ;--
 2. அடுப்பில் கடாய் வைத்து 100 கிராம் கடலை பருப்பு  மற்றும் 50 கிராம் நிலக்கடலை பருப்பை போட்டு நன்றாக வறுத்து பருப்பை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு பாத்திரத்தில்  400 கிராம் ராகி மாவு,பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம்,பெருங்காயத் தூள் 1/2 ஸ்பூன்,சோம்பு  ஒரு ஸ்பூன்,மல்லி இலை 2 ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், கறிவேப்பிலை  சிறிதளவு,உப்பு தேவையான அளவு போட்டு கலந்து விட்வும்.
 4. இதனுடன் மிஸ்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள பருப்பு மாவையும் போட்டு சிறிதளவு எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை பக்கோடா பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
 5. அடுப்பில் கடாய் வைத்து 1/2 லிட்டர்  எண்ணெய்யை ஊற்றவும்.
 6. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள பக்கோடா மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போட்டு பொரிக்கவும்.
 7. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து பக்கோடாவை எடுக்கவும். 
 8. சுவையான ராகி பக்கோடா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்