முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

106 திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.10   -  முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கிவைக்கப்பட்ட அன்னதானத்திட்டம் (செப்.11 ம் தேதி) நாளை மேலும் 106 திருக்கோயில்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். மேலும் திருக்கோயில்களின் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதாவால் அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் 2002​ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 23​ஆம் நாளன்று மைலாப்ர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அன்னதானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதாவால் முந்தைய ஆட்சிக்காலத்திலேயே மாநில அளவில் 360 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தி செயல்படுத்தப்பட்டது. இந்த அரிய திட்டத்தை முழு உத்வேகத்துடன் செயல்படுத்தப்படும் எனவும் இத்திட்டம் மேலும் 106 திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் தமிழக முதலமைச்சர்  ஆணையிடப்பட்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் கூற்றையும் உண்டி கொடுப்போர் உயிர் கொடுத்தோரே என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு நமக்கு அறிவுறுத்தியதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி அவர்களது திருக்கரத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இப்புதுமைத் திட்டமான அன்னதானத் திட்டம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி செப்டம்பர் 11​ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாநில அளவில் 106 திருக்கோயில்களில் தொடங்கப்படவுள்ளது. 

திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மிகுந்த பயன் அளித்து வரும் இவ்வுன்னதத் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஆணையின்படி மயிலாப்ர் அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (11.9.2011) அன்று பிற்பகல் 1.35 மணிக்கு அறநிலையத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இதுபோன்று அமைந்தகரை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், விருஞ்சிபுரம் அருள்மிகு மார்கபந்து சுவாமி திருக்கோயில், திண்டிவனம் அருள்மிகு இலட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், கீழையூர் அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் வடக்குவீதி அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், மன்னார்குடி அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில், மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில், திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதசுவாமி திருக்கோயில், திருவைகுண்டம் கருங்குளம் அருள்மிகு வெங்கடாசலபதிசுவாமி திருக்கோயில், திருமுருகன்ண்டி அருள்மிகு திருமுருகநாதசுவாமி திருக்கோயில், குமாரபாளையம் அருள்மிகு காளியம்மன் திருக்கோயில் போன்ற மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 106 திருக்கோயில்களில் இத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது.

 இந்த அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து திருக்கோயில்களிலும் இத்திட்டத்திற்கென உண்டியல் ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவியை தாங்கள் விரும்பும் திருக்கோயிலுக்கு அளிக்கலாம். தங்களின் பிறந்த நாள், மண நாள் போன்ற தாங்கள் விரும்பும் நாட்களில் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க இத்திட்டத்தின்படி அதற்கான தொகையை செலுத்தி தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

இந்த சிறப்புமிகு அன்னதானத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். 106 திருக்கோயில்களுக்கு இத்திட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யும் போது மேலும் சுமார் 25 இலட்சம் பக்தர்கள் பயன்பெறுவார்கள். செப்டம்பர் 11​ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 106 திருக்கோயில்களில் தொடங்கப்படவுள்ள இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க அனைத்து பக்தப் பெருமக்களையும் ஆன்மிக பெருமக்களையும் ஆர்வலர்களையும் வேண்டப்படுகிறது. அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்படும் 106 திருக்கோயில்கள் பட்டியல்

இணை ஆணையர் சென்னை பிரிவு (சென்னை மாவட்டம்) திருக்கோயிலின் பெயர் வருமாறு:-   

1) அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்ர், சென்னை​4   

2) அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், பள்ளியப்பன் தெரு, சென்னை​79   

3) அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை   

4)அருள்மிகு திருவெட்டீஸ்வரர் திருக்கோயில், திருவெட்டீஸ்வரன்பேட்டை, சென்னை ​5  

 5)அருள்மிகு செளமியதாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை​49   

6) அருள்மிகு கோமளீசுவரர் திருக்கோயில், கோமளீஸ்வரன் பேட்டை, சென்னை​600 002   

7) அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை 8) அருள்மிகு பாலசுப்பிரமணியசாமி திருக்கோயில், தேனாம்பேட்டை, சென்னை​18 இணை ஆணையர் வேலூர் பிரிவு (காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்கள்) 

9) அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், பெரியபாளையம், திருவள்ளூர் மாவட்டம்   

10) அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், புட்லூர், திருவள்ளூர்மாவட்டம்   

11) அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிறுவாபுரி,  பொன்னேரி வட்டம்   

12) அருள்மிகு பக்தவத்சல பெருமாள்திருக்கோயில்  திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்   13) அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், காக்களூர், திருவள்ளூர் மாவட்டம்   

14) அருள்மிகு கைலாசநாதர் மற்றும் தட்சிணா மூர்த்தி திருக்கோயில், கோவிந்தவாடி, அகரம்   

15) அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம்   

16) அருள்மிகு அகோரவீரபத்திரசாமி திருக்கோயில், அனுமந்தபுரம், காஞ்சிபுரம்மாவட்டம்   

17)அருள்மிகு மார்கபந்து சுவாமி திருக்கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்   

18) அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில், புத்துக்கோயில், வாணியம் பாடிவட்டம், வேலூர் மாவட்டம் இணை ஆணையர் விழுப்புரம் பிரிவு3 (விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள்) 

19) அருள்மிகு  புத்துவாயம்மன் திருக்கோயில், கோலியனூர் வட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம்   

20)அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில், திண்டிவனம் நகர் மற்றும் வட்டம், விழுப்புரம் மாவட்டம்   

21)அருள்மிகு மஞ்சனீஸ்வரர் திருக்கோயில், கீழ்புத்துப்பட்டு, திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்   

22)அருள்மிகு திருவிக்ரமசுவாமி திருக்கோயில், திருக்கோயிலூர் நகர் மற்றும் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 

  23)அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவரங்கம், சங்கராபுரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்   

24)அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கீழையூர், திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்   

25)அருள்மிகு வராகஸ்வாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்குடி வட்டம், கடலூர் மாவட்டம்   

26)அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோயில், சிதம்பரம் நகர் மற்றும் வட்டம், கடலூர் மாவட்டம்   

27)அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர் நகர் மற்றும் வட்டம், மாவட்டம்   

28)அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலுடையான்பட்டு, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் (அமி.நெய்வேலி குழுக்கோயில்கள்)   

29)அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில், பெண்ணாடம், கடலூர் மாவட்டம்   

30)அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில், பெருமுளை, திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம் இணை ஆணையர் மயிலாடுதுறை பிரிவு

 31)அருள்மிகு சட்டநாதசுவாமி திருக்கோயில், சீர்காழி நகர் மற்றும் வட்டம்,  நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுர ஆதீனம்   

32)அருள்மிகு கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாடுதுறை, குத்தாலம் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்   

33)அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில்,  திருவிடைமருதூர் நகர் மற்றும் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்   

34)அருள்மிகு பிராணநாதசுவாமி திருக்கோயில், திருமங்கலக்குடி, திருவிடைமருதூர் வட்டம் , தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்  (தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்) 

35)அருள்மிகு வடவாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்   

36)அருள்மிகு கஸ்தூரியம்மன் திருக்கோயில், நரசிங்கம்பேட்டை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், திருவாடுதுறை ஆதீனம்   

37)அருள்மிகு கம்பகரேஸ்வரர்  திருக்கோயில், திருபுவனம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தருமபுர ஆதீனம்   

38)அருள்மிகு அருணாஜடேஸ்வரர் திருக்கோயில், திருப்பனந்தாள், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம், தருமபுர ஆதீனம் இணை ஆணையர் தஞ்சாவூர் பிரிவு

(தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்) 

39)அருள்மிகு இராஜகோபாலசுவாமி திருக்கோயில், வடக்குவீதி, அரண்மனை தேவஸ்தானம், தஞ்சாவூர்   

40)அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில், சூரக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம்   

41)அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில், 108 சிவாலயம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்   

42)அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில், பட்டுக்கோட்டை, நகர், வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்   

43)அருள்மிகு ஆனந்த விநாயகர் திருக்கோயில்,  ஒத்தை தெரு, மன்னார் குடி நகர், வட்டம், திருவாரூர் மாவட்டம்   

44)அருள்மிகு அக்னீஸ்வரசாமி திருக்கோயில், கொள்ளிகாடு, திருதுறைப்ண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம்   

45)அருள்மிகு சேஷபுரிஸ்வரர்திருக்கோயில்,  திருப்பாம்புரம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்   

46)அருள்மிகு மேகநாதசாமி திருக்கோயில், திருமெய்ச்சூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்   

47)அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோயில், திருத்துறை ண்டி, நகர், வட்டம், திருவாரூர் மாவட்டம்   

48)அருள்மிகு ட்சயலிங்கசுவாமி திருக்கோயில், கீழவேளூர் , நகர் , வட்டம், நாகப்பட்டினம்  மாவட்டம் இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி பிரிவு

(திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்)

 49)அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், பேரையூர், திருமயம் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்   

 50)அருள்மிகு லோகநாதசுவாமி திருக்கோயில், கீழரண்சாலை, திருச்சிநகர், வட்டம்,  மாவட்டம் 

 51)அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பட்டூர், மண்ணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்   

52)அருள்மிகு திருமூலநாதசுவாமி திருக்கோயில், வாளூர், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்   

53)அருள்மிகு நல்லாண்டவர் திருக்கோயில், மணப்பாறை நகர் மற்றும் வட்டம்   

54)அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில்அரவக்குறிச்சி நகர் மற்றும் வட்டம்   

55)அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில், திருமணஞ்சேரி, கறம்பக்குடி வட்டம் (இ) புதுக்கோட்டை திருக்கோயில்கள்   

56)அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், விராலிமலை, இலுப்ர் வட்டம் (இ) புதுக்கோட்டை திருக்கோயில்கள்   

57)அருள்மிகு பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், மண்டையூர் குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை மாவட்டம்   

58)அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில், அரியலூர் நகர் மற்றும் வட்டம், மாவட்டம் இணை ஆணையர் மதுரை பிரிவு

(மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்) 

59)அருள்மிகு அரசமர பிள்ளையார் திருக்கோயில்,காமராஜர் சாலை, மதுரை   

60)அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், திருமங்கலம், நகர், வட்டம், மதுரை மாவட்டம்    

61)அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அனந்தகிரி, கொடைகானல்   

62)அருள்மிகு சித்திரரத வல்ல பெருமாள் திருக்கோயில்,, குருவித்துறை   

63)அருள்மிகு பாலசுப்பிரமணிய திருக்கோயில், தென்கரை, பெரிய குளம் , தேனீ மாவட்டம்  

 64)அருள்மிகு திருக்காலத்தீஸ்வரர் திருக்கோயில், உத்தமபாளையம்   65)அருள்மிகு சுயம்பு சனீஸ்வர  பகவான் திருக்கோயில், குச்சனூர்   

66)அருள்மிகு சித்தி விநாயகர் இரயிலடி திருக்கோயில், திண்டுக்கல்   

67)அருள்மிகு இடும்பன்கோயில், பழனி   

68)அருள்மிகு வீரராகவபெருமாள் திருக்கோயில்,(இ) கூடலழகர் திருக்கோயில், மதுரை  

 69)அருள்மிகு யோகநரசிங்கபெருமாள் திருக்கோயில்,(இ) காளமேக பெருமாள் திருக்கோயில் , திருமோகூர்   

70)அருள்மிகு சொந்தராஜ பெருமாள் திருக்கோயில், வடமதுரை, திண்டுக்கல் இணை ஆணையர் சிவகங்கை பிரிவு

(சிவகங்கை, இராமாநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள்) 

71)அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்,, திருப்புவனம், மானாமதுரை வட்டம், சிவகங்கை.   

72)அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், மானாமதுரை, நகர் மற்றும் வட்டம், சிவகங்கை   

73)அருள்மிகு சேவகப்பெருமாள் திருக்கோயில், சிங்கம்புணரி (ம) திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை   

74)அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயில், பரமக்குடி நகர் மற்றும் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்   

75)அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயில், மூவரை வென்றான், திருவில்லிபுத்தூர் வட்டம், விருது நகர் மாவட்டம்   

76)அருள்மிகு கடமுடைய அய்யனார் திருக்கோயில், காளையார்  குறிச்சி சிவகாசி வட்டம் 

77)அருள்மிகு திருமேனிநாதசுவாமி திருக்கோயில், திருச்சுழி, நகர் மற்றும் வட்டம், விருது நகர் மாவட்டம்.   

78)அருள்மிகு மங்கள நாதசுவாமி திருக்கோயில், திரு உத்திர கோசமங்கை, இராமநாதபுரம் மாவட்டம்   

79)அருள்மிகு உத்தி த்த பெருமாள் திருக்கோயில் தொண்டி, திருவாடானை வட்டம், இராமநாதபுரம் மாவட்டம்   

80)அருள்மிகு கடல் அடைந்த பெருமாள் திருக்கோயில், தேவிபட்டினம், இராமநாதபுரம் மாவட்டம்   

81)அருள்மிகு ஜெய வீரஆஞ்சநேயர் திருக்கோயில்,  சேதுக்கரை, இராமநாதபுரம் வட்டம், மாவட்டம் இணை ஆணையர் திருநெல்வேலி பிரிவு

(திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள்) 

82)அருள்மிகு கோபால கிருஷ்ணசாமி வகையறா ஆஞ்சநேயர் திருக்கோயில், கிருஷ்ணாபுரம், தென்காசி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்  

 83)அருள்மிகு  பாபநாசசாமி திருக்கோயில், பாபநாசம், அம்பா சமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்   

84)அருள்மிகு கரையடி மாடசாமி, திருக்கோயில், பிராஞ்சேரி, அம்பா சமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்   

85)அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிந்தாமணி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்   

86)அருள்மிகு சொக்கலிங்க சுவாமி திருக்கோயில், சிந்தாமணி, சிவகிரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்   

87)அருள்மிகு வேம்படி இசக்கியம்மன் திருக்கோயில், தூத்துகுடி நகர் மற்றும் வட்டம், தூத்துகுடி  மாவட்டம்   

88)அருள்மிகு சோலைச்சாமி திருக்கோயில், எப்போதும் வென்றான், ஒட்டப்பிடாராம் வட்டம், தூத்துகுடி மாவட்டம்   

89)அருள்மிகு வெங்கடாசலபதிதிருக்கோயில்  கருங்குளம், திருவைகுண்டம் வட்டம், தூத்துகுடி  மாவட்டம்   

90)அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், விளாத்திகுளம் நகர் மற்றும் வட்டம், தூத்துகுடி மாவட்டம்   

91)அருள்மிகு ஈஸ்வரகால தத்தான் திருக்கோயில், அளப்பன் கோடு, விளவங்கோடு வட்டம், கன்னியாகுமரி மாவட்டம் இணை ஆணையர் கோவை பிரிவு

((கோவை, திருப்ர், ஈரோடு, மாவட்டங்கள்) 

92)அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில்,மொண்டபாளையம், கோவை மாவட்டம்   

93)அருள்மிகு அனுமந்தராமசாமி திருக்கோயில்,இருகம்பாளயம், மேட்டுபாளையம் வட்டம், கோவை மாவட்டம்   

94)அருள்மிகு மாரியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோயில், பிச்சம் பாளையம், திருப்ர் மாவட்டம்   

95)அருள்மிகு இலட்சுமி நரசிங்க பெருமாள்திருக்கோயில், தாளக்கரை, திருப்ர் மாவட்டம்   

96)அருள்மிகு திருமுருகநாதசாமி திருக்கோயில், திருமுருகன் ண்டி அவிநாசி வட்டம், திருப்ர் மாவட்டம்   

97)அருள்மிகு அய்யப்பசாமி திருக்கோயில், பொள்ளாச்சி நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம்    

98)அருள்மிகு மகாவீர ஆஞ்சநேயசாமி திருக்கோயில், வ.உ.சிபார்க், ஈரோடு நகர் மற்றும் மாவட்டம், ஈரோடு மாவட்டம்   

99)அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில், பச்சைமலை, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம்   

100)அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில், குருந்தமலை மேட்டுபாளையம், கோவை மாவட்டம்   

101)அருள்மிகு பாலமலை அரங்கநாதசாமி திருக்கோயில், நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம். இணை ஆணையர் சேலம் பிரிவு 

102)அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி வகையறா திருக்கோயில், நாகவள்ளி, மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம்   

103)அருள்மிகு ஆஞ்சநேயசாமி திருக்கோயில்,மெட்டலா, இராசிபுரம் வட்டம் நாமக்கல் மாவட்டம்   

104)அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், குமாரபாளையம், திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம்   

105)அருள்மிகு முத்தத்ராயசாமி மற்றும் திம்மராயசுவாமி திருக்கோயில், நெருப்ர், பென்னாகரம், தர்மபுரி மாவட்டம்.  

 106)அருள்மிகு சென்றாயசாமி திருக்கோயிலின் உபகோயில் அருள்மிகு.காலபைரவர் திருக்கோயில் அதியமான் கோட்டை, தர்மபுரி மாவட்டம்.  (சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்கள்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்