முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் புடின் கட்சிக்கு பெரும் சரிவு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

மாஸ்கோ, டிச. - 6 - ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.  சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷ்யாவின் மாபெரும் தலைவராக உருவெடுத்தவர் புடின். 2000 முதல் 2008 வரை அந்நாட்டின் அதிபராக இருந்துள்ளார். 3 வது முறை அதிபராக இருக்க விதிகள் இடம் தராததால் தனது ஆதரவாளரான மெத்வதேவை அதிபராக்கி விட்டு இவர் பிரதமரானார். இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களில் நடக்கும் அதிபர் தேர்தலில் புடின் மீண்டும் போட்டியிடலாம் என்று கருதப்படும் நிலையில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் நிலையில் புடினின் கட்சிக்கு 50 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. வாக்குப் பதிவின்போது ஏராளமான முறைகேடுகளில் புடின் கட்சியினர் ஈடுபட்டனர். இருந்தும் அவருடைய கட்சிக்கு 17 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்