முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளி விலை உயரும்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜன. - 19 - இறக்குமதி வரி உயர்வால் தங்கம், வெள்ளியின் விலை மேலும் உயரும் என தெரிகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 10 கிராம் தங்கத்திற்கு 300 ரூபாய் வரி விதிப்பு இருந்தது. இதை மத்திய அரசு மாற்றியுள்ளது. தங்கத்தின் மதிப்பு 2 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி 10 கிராம் தங்கத்திற்கு இறக்குமதி வரியாக ரூ. 570 கட்ட வேண்டியதுள்ளது. இதனால் வரி இரண்டு மடங்காகி உள்ளது. இதே போன்று வெள்ளி இறக்குமதிக்கும் 6 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு கிலோ வெள்ளி இறக்குமதிக்கு ரூ. ஆயிரத்து 500 வரியாக இருந்தது. தற்போது இது ரூ. 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டிலும், தங்கம், வெள்ளி மீதான உற்பத்தி வரியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்பு 10 கிராம் தங்கத்திற்கு உற்பத்தி வரியாக ரூ. 200 வசூலிக்கப்பட்டு வந்தது. இனி தங்கத்தின் மதிப்பில் ஒன்றரை சதவீதம் வரியாக வசூலிக்கப்படும். அது போன்று வெள்ளிக்கு 4 சதவீதம் உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பால் நடப்பு நிதியாண்டில் எஞ்சிய மாதங்களுக்குள் அரசுக்கு ரூ. 500 லிருந்து ரூ. 600 கோடி வரை கிடைக்கும் என மத்திய நிதியமைச்சகம் மதிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவு நேற்று முன்தினம் அமலுக்கு வந்த நிலையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்