முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 19 - டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கால் சமையல் கேஸுக்கு பெரும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நாமக்கல் கலெக்டர் லாரி உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்பள, வாடகை ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் 4100 டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து 47 பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு எல்.பி.ஜி. டேங்கர்கள் வராததால் கேஸ் நிரப்பும் பணி முற்றிலுமாக பாதித்துள்ளது. பிளாண்டுகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு சொந்தமான பாட்டிலிங் பிளாண்டுகள் சேலம், பெருந்துறை, நெகமம், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளிலும், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம் பிளாண்ட் கும்மிடிப்பூண்டியிலம் இயங்கி வருகின்றன.  டேங்கர் லாரி ஸ்டிரைக் காரணமாக கேஸ் நிரப்பும் பணி நடைபெறவில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு கும்மிடிப்பூண்டி, எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளில் இருந்துதான் கேஸ் வரவேண்டியுள்ளது. கேஸ் ஏஜென்சிகளுக்கு தினமும் 2 லாரி சிலிண்டர்கள் வரும். ஆனால் தற்போது ஒரு லாரி மட்டும்தான் வருவதாக ஏஜெண்டுகள் கூறுகிறார்கள். அதனால் சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு 45 நாட்கள் கழித்தே சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுவதாக ஏஜெண்டுகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகைக்கு முன்புவரை 30 லட்சம் பேர் தமிழகத்தில் கேஸுக்கு பதிவு செய்து காத்திருந்தனர். இவர்களுக்கு முன்புபோல் சிலிண்டர் சப்ளை செய்ய முடியவில்லை.  இந்த நிலையில் புதிதாகவும் சிலிண்டருக்காக பொதுமக்கள் பதிவு செய்து வருகிறார்கள். டேங்கர் வேலை நிறுத்தத்தால் பதிவு செய்தோருக்கு முன்புபோல் சிலிண்டர்கள் தர முடிவதில்லை. கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக் காரணமாக 10 ஆயிரம் டன் சிலிண்டர்கள் நிரப்பும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால்  தினமும் ரூ. 2.5 கோடி வீதம் நேற்றுவரை ரூ. 12.5 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கேஸ் தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களில் அதிகமாகிவிடும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்றார். 

ஆனால் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னம்பலம் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் இன்னும் எங்களை அழைக்கவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்றார். இதனிடையே நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன், எல்.பி.ஜி. டேங்கர் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் பொன்னம்பலம் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது கலெக்டர் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை விலக்கிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலளித்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் பொதுத்துறை ஆயில் நிறுவனங்கள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வுகாண தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை ஆயில் நிறுவன அதிகாரிகள் எங்களை பேச்சுவாத்தைக்கு அழைக்கவில்லை. எனவே எங்களது பேச்சுவார்த்தை தொடரும் என்றார். இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கு உங்களின் கோரிக்கைகளை பரிந்துரை செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்