எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.- 15 - அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில், மதிமுகவில் பணியாற்றி வரும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 250 பேர் கழகத்தில் இணைந்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும, தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா முன்னிலையில் தலைமைக் கழகத்தில் நேற்று (14.12.2012 வெள்ளிக் கிழமை), மதிமுகவில் பணியாற்றி வரும் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 250 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், மதிமுகவைச் சேர்ந்த பொறியாளர் அணி துணைச் செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட அவைத் தலைவருமான லட்சுமணன், திருநெல்வேலி மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்குமார், மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் தூத்துக்குடி வசந்தம் சரவணன், சட்டத் துறை துணைச் செயலாளர் மதுரை ஆசைத்தம்பி, சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் ரைஸ்மில் பாலசுப்பிரமணியம், மாநில சட்டத் துறை துணைச் செயலாளரும், வடுகபட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர் கோவை சி.ஜெ. பிலிப்சன், மாணவர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் பொன்னியின் செல்வன், சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றியச் செயலாளர் திரு. புதுவயல் சுப்பிரமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் காரைக்கால் சக்திவேல் உடையார், தென் சென்னை மாவட்ட அவைத் தலைவர் ஹைடெக் மனோகரன், மாவட்டப் பொருளாளர் ஈகை செல்லப்பாண்டியன் உள்ளிட்ட 125 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், மதிமுகவைச் சேர்ந்த தென் சென்னை மாவட்டம், அண்ணாநகர் பகுதிச் செயலாளர் என்.எஸ். விஜயன், திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் பார்த்தசாரதி, சட்டத் துறை துணைச் செயலாளர் திருவள்ளூர் சிவ. சண்முகம், சட்டத் துறை துணைச் செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட துணைச் செயலாளருமான கே.வி. சுரேஷ், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியச் செயலாளர் முத்து சுப்பிரமணியன், மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளரும், நாகர்கோவில் நகர மன்ற 1ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.வி. உதயகுமார், மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு. அய்யங்காளை, பெரியகுளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், கோவை 4ஆவது பகுதிச் செயலாளர் பிட்டா ரங்கநாதன், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரச் செயலாளர் பசும்பொன் மனோகரன், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியச் செயலாளர் கண்ணபிரான், தலைமைக் கழக சொற்பொழிவாளர் பழனி குமணன், தென் சென்னை மாவட்டம், பொதுக்குழு உறுப்பினர் அன்னை டேவிட் உள்ளிட்ட 125 நிர்வாகிகள் கழகத்தில் இணைந்தனர்.
ஆக மொத்தம் மதிமுகவைச் சேர்ந்த 250 நிர்வாகிகள் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வுகளின் போது, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தும் உடன் இருந்தார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, மதிமுகவில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கான கழக உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதா, ம.தி.மு.க.வில் இருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசுகையில், இன்று அன்பு சகோதரர், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்தின் ஏற்பாட்டின்படி, ம.தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் இணைய வந்துள்ள உங்கள் அனைவரையும், கழகப் பொதுச் செயலாளர் என்ற முறையில் அன்புடன் வருக! வருக! என வரவேற்கிறேன்.
உங்கள் வரவு நல்வரவு. நீnullங்கள் வந்த இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இன்று கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதை தெரிவித்து, நம்முடைய லட்சியம் கல்லாமை, இல்லாமை இல்லாத ஒரு தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும். மக்களுக்காகவே இயங்குகின்ற ஒரு இயக்கம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை நாம் போராடிப் பெற வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நீnullங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமைய எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம் என்று உரையாற்றினார்.
கருணை உள்ளத்தோடு தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக,
கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை, கழகத்தில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
அ.தி.மு.க.பொதுச் செயலாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் உள்ளிட்டோர் பெருந்திரளாகத் திரண்டிருந்ததோடு, சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு, கழக உடன்பிறப்புகள் கழகக் கொடிகளை தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் ஆங்காங்கே திரண்டிருந்து மகத்தான வரவேற்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


