முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னா குண்டு வெடிப்பு சம்பவம்: மங்களூரில் பெண் கைது

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

மங்களூர், நவ.15 - பாட்னாவில் நடந்த  குண்டு வெடிப்பு எதிரிகளுக்கு உதவியாதக மங்களூரில் ஆயிஷா பானு என்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த பெண் விசாரணைக்காக பாட்னா போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியைச் சேர்ந்த இந்திரா, ஜூபைர் என்பவரை காதலித்து திருமணம் செய்து தனது பெயரை ஆயிஷாபானு என்று மாற்றிக்கொண்டார். பீடி முகவராக இருந்த ஜூபைர் பின்னர் துபைக்குச் சென்று பணிபுரிந்தாராம்.  அப்போது இந்தியாவிலிருந்து, ஆயிஷா பானுவை ஹவாலா பணத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டாராம்.  

இந்த நிலையில் அண்மையில் பாட்னாவில் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில்  நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையில் பாச்னா போலீஸார் சிலரிடம் விசாரணை நடத்தினர்.  அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப டையில் ஆயிஷா பானுவை போலீஸார் கைது செய்தனர். இவருக்கு பாட்னா குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இல்லை என்ற போதிலும், இதில் தொடர்புடைய வேறு சிலருக்கு ஆயிஷா ரூ. 5 கோடி வரை பண உதவி செய்துள்ளதும், 35 வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக     போலீஸார் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்