முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் புகார்: முன்னாள் நீதிபதி அவதூறு வழக்கு

புதன்கிழமை, 15 ஜனவரி 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன, -16 - பாலியல் புகாரில் சிக்கியுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்து வரும் சுவதேந்தர் குமார், தன் மீது அவதூறு செய்திகள் வெளியிட்டதாக இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபது ஜி.எஸ்.சிஸ்டானி முன்னிலையில் மூத்த வழக்கறிஞர்கள் மணீந்தர் சிங், என்.கே.கவுல் ஆகியோர் சுவதேந்தர் குமார் சார்பில் வழக்கை பதிவு செய்ததோடு, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் எனவும் கோரினர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில், தன் மீதான பாலியல் புகார் குறித்த செய்திகளை ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்றும் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழும் நஷ்டஈடாக தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, மேற்கூரிய ஊடக நிறுவனங்களுக்கு தவறான மற்றும் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை வெளியிட்டதாக சுவதேந்தர் குமார் கடந்த 11-ஆம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago