முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகரியில் நடிகை ரோஜா உருவ பொம்மை எரிப்பு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

நகரி, செப் 18:

ஆந்திர மாநிலம் நகரியில் உள்ள கங்கையம்மன் கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில் நகரி எம்.எல்.ஏவும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது முதல் ஆரத்தி கொடுப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா தனக்குத்தான் முதல் ஆரத்தி கொடுக்கும் உரிமை தர வேண்டும் என்று கூறினார். இதற்கு தெலுங்குதேசம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக நெரிசல் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. யாரோ மர்ம ஆசாமி ஒருவர் ரோஜாவின் கையில் கத்தியால் கிழித்தார்.

இதற்கிடையே ஜாத்திரை விழாவில் மோதல் ஏற்பட்டதற்கு நடிகை ரோஜாவே காரணம். எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். புத்தூர் நகர தெலுங்குதேசம் கட்சி தலைவர் அரி தலைமையில் அந்த கட்சியினர் நடிகை ரோஜா உருவ பொம்மையை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் திருப்பதி, அரக்கோணம் நெடுஞ்சாலையில் வைத்து ரோஜா உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இது குறித்து நகர தெலுங்கு தேசம் தலைவர் அரி கூறுகையில், கங்கமையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில் இதுவரை மோதல் நடந்தது கிடையாது. ஆனால் நடிகை ரோஜா எம்.எல்.ஏவான தனக்குத்தான் முதல் ஆரத்தி என்று உரிமை கொண்டாடியதால் மோதல் ஏற்பட்டது. இதனால் திருவிழாவுக்கு வந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவில் திருவிழாவில் அவர் அரசியலை புகுந்த பார்க்கிறார். நடிகை ரோஜாவால் கோவில் திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ரோஜாவை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்