முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்திரத்தில் கோளாறு: ஏ.டி.எம்.மில் கொட்டிய பணம்!

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப் 22:

ஆந்திர மாநிலம் மெகபூர் நகரை சேர்ந்தவர் செந்தில். கல்லூரி  படிப்பை முடித்த இவர் ஐதராபாத் எஸ்.ஆர். நகரில் விடுதியில் தங்கி வேலை தேடி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்கள் அரிபிரசாத், சிவதூர்கா பிரசாத் ஆகியோருடன் விடுதி அருகில் உள்ள அரசு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்துக்கு ரூ. 200 பணம் எடுக்க சென்றார். தனது ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் சொருகி பின்னர் ரகசிய குறியீட்டு எண்ணை அழுத்தினார். அப்போது திடீரென ஏ.டி.எம். எந்திர பாகங்கள் திறந்தது. எந்திரத்தில் இருந்து ரூ. ஆயிரம், ரூ. 500 என பண மழை கொட்டியது. ஏறத்தாழ ரூ. ஒன்றரை லட்சம் வரை பணம் தரையில் கொட்டியது. அதிர்ச்சியடைந்த மாணவர்கள்  சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அவசர போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அருகில் உள்ள எஸ்.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வரும் வரை 3 மாணவர்களும் அந்த பணத்துக்கு பாதுகாப்பாக இருந்தனர். போலீசார் வந்து பணத்தை கைப்பற்றினர். பணம் வைக்கும் அறை பூட்டாமல் இருந்ததால் பணம் வெளியே கொட்டியது தெரியவந்தது. ஏ.டி.எம்.மில் ரூ. 26 லட்சம் வரை இருந்தது. இதில் ரூ. ஒன்றரை லட்சம் தரையில் கொட்டியது. அந்த ஏ.டி.எம்மின் காவலாளியும் இல்லை. கண்காணிப்பு கேமிராவும் இல்லை. வங்கி அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டதற்கு போலீசார் கண்டனம் தெரிவித்தனர். அதோடு மாணவர்களின் நேர்மையை போலீஸ் கமிஷனர் மகேந்திரா ரெட்டி பாராட்டினார். அவர்களுக்கு விருது வழங்க சிபாரிசு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இது பற்றி மாணவர்கள் கூறும் போது பொறுப்பான செயலில் ஈடுபட்டதை பெருமையாக கருதுகிறோம். இதனை ரூ. ஒரு கோடி சம்பாதித்தற்கு சமமாக கருதுகிறோம் என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்