முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகராஷ்டிராவில் இழுபறி: தீபாவளிக்கு பின் பாஜ முடிவு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக் 22 - மகராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜ 122, இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் 42 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் 25 ஆண்டு கால பாஜ கூட்டாளியான சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜ ஆட்சி அமைக்க இன்னும் 23 எம்எல்ஏக்கள் தேவை. தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே என்சிபியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரபுல் பட்டேல், பாஜ ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு அளிக்க தயார் என்று தெரிவித்தார். மகராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க சிவசேனா கூட்டணியை விரும்பினால் துணை முதல்வர் பதவி, ஒருங்கிணைந்த மகராஷ்டிரா உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு பாஜ ஒப்புக் கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினால் என்சிபி தயவை நாடட்டும் என உத்தவ்தாக்கரே நிபந்தனை விதித்தார். ஆனால் நிபந்தனையற்ற ஆதரவு தந்தால் பரிசீலிப்போம் என்பது பாஜவின் கருத்தாக உள்ளது. மேலும் பாஜ நிர்வாகிகள் மத்தியிலும் என்சிபி ஆதரவை பெறுவதில் அதிருப்தி காணப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் சிவசேனாவின் நிபந்தனைகளுக்கு ஒத்து போக முடியாத மனநிலை காணப்படுவதால் கூட்டணி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் இரண்டாவது நாளாக நேற்றும் கூட்டணி குறித்து எந்த முடிவுக்கும் பாஜகவினரால் வர முடியவி்ல்லை. இதனால் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற பாஜ தலைவர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜ்நாத்சிங் தீபாவளிக்கு பிறகே மகராஷ்டிர வரவுள்ளதாக தெரிவித்ததார். அதனால் கூட்டணி பேச்சுவார்த்தையை தீபாவளிக்கு பிறகு முடிவு செய்ய பாஜ தீர்மானித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்