முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரீப்பின் குழந்தைகளை கொல்வோம்: தலிபான்கள்

சனிக்கிழமை, 20 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - நவாஸ் ஷெரீப்பின் குழந்தைகள் உட்பட தலைவர்களின் குழந்தைகளை கொல்வோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பெஷாவரில் நடந்தது போல பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெஹிரி-இ-தலிபான் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

 பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவம் நடத்தும் பள்ளியில் தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 148 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 தீவிரவாதிகளின் படங்களை நேற்று முன்தினம் பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. அத்துடன் இந்த தாக்குதலுக்கு 38 வயதான பிரபல வாலிபால் வீரரான உமர் மன்சூர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார் என்ற தகவல் பாகிஸ்தான் ராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெஷாவரில் பள்ளி குழந்தைகளை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் தலிபான் உட்பட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை அழிக்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதை தொடர்ந்து ஆப்கன் எல்லையில் உள்ள பாகிஸ்தானிய பழங்குடி பிராந்தியங்களில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி 77 தலிபான் தீவிரவாதிகளை கொன்றது. இதற்கு தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

தெஹ்ரிக் இ தலிபான் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவர் உமர் மன்சூர் விடுத்துள்ள அந்த மிரட்டலில், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டால், பெஷாவாரில் நடத்தப்பட்டது போன்ற பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் பெஷாவர் தாக்குதல் நடத்தப்பட்ட 7 மணி நேரத்தின் தொகுப்பும் தாக்குதல் தொடர்பாக அவர் தீவிரவாதிகளுக்கு அளித்த உத்தரவுகளும் ஆங்கில வசனங்கள் சேர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ராணுவ தாக்குதல் தொடர்ந்து கொண்டே இருந்தால் நாங்களும் பதிலடி தாக்குதல் நடத்துவோம் என தலிபான் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் முகமது கராசானி விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது,

பாகிஸ்தான் சிறைகளில் உள்ள தலிபான் இயக்க தலைவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க கூடாது. அவ்வாறு வழங்கப்பட்டால் அதன்பிறகு ஒவ்வொரு ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குழந்தைகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் குழந்தைகளை கொல்வோம். காந்தஹார் விமான கடத்தலில் தொடர்புடைய ஓமர் ஷேக்குக்கு மரண தண்டனை வழங்கினால் அனைத்து கட்சி தலைவர்களின் வீடுகளிலும் ராணுவ அதிகாரிகளின் வீடுகளிலும் இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும். இவ்வாறு தலிபான் தலைவர் கராசானி மிரட்டல் விடுத்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து