முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் தான்வே ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - உணவு மற்றும் பொது விநியோகத் துறை மத்திய இணை அமைச்சர் தான்வே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மகாராஷ்டிர மாநில பாஜக தலைவரானதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் மாநில தலைவராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். இதனைத் தொடர்ந்து அம்மாநில பாஜ தலைவராக மத்திய இணை அமைச்சர் தான்வே நியமிக்கப்பட்டார்.

ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை பாஜகவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் தான்வே தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான்வே தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து