முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

803வது ஆண்டு விழா: அஜ்மீர் தர்காவுக்கு ஒபாமா மலர் போர்வை அனுப்பினார்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் உலகப் புகழ் பெற்ற தர்கா உள்ளது. ஆப்கானிஸ்தானில் பிறந்த இஸ்லாமிய மத குரு மொய்னூதீன் சிஸ்தி அஜ்மீரில் ஏழைகளுக்காக சேவை செய்து மறைந்தார். அவர் நினைவிடம் உள்ள இடத்தில் சுல்தான் மக்மூத் கில்ஜி என்பவர் தர்கா கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் இந்த தர்காவில் உருசு விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமானவர்கள் டெல்லியில் இருந்து அஜ்மீர் தர்கா வரை நடந்தே செல்வார்கள். இந்த ஆண்டுக்கான அஜ்மீர் தர்கா உருசு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அஜ்மீர் தர்கா கமிட்டியினர் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த நிலையில் அஜ்மீர் தர்கா உருசு விழா பற்றி அறிந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மலர் போர்வை ஒன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.

சிவப்பு நிற அந்த மலர் போர்வை நேற்று அஜ்மீர் தர்காவில் நடக்கும் 803 உருசு விழாவில் பயன்படுத்தப்படும். ஒபாமா அனுப்பிய மலர் போர்வையை நேற்று தர்கா கமிட்டி நிர்வாகிகளிடம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் எவர்மா ஒப்படைத்தார். அந்த மலர் போர்வையுடன் செய்தி ஒன்றையும் ஒபாமா இணைத்து அனுப்பியிருந்தார்.

அதில், அவர் உலகம் முழுவதும் அமைதி தவழட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க அதிபர் ஒருவர் அஜ்மீர் தர்காவுக்கு மலர் போர்வை அனுப்பி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து