முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சி வெற்றி

திங்கட்கிழமை, 4 மே 2015      அரசியல்
Image Unavailable

லக்னோ, உத்தரபிரதேச இடைத் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. பாரதீய ஜனதாவுக்கு 3வது இடம் கிடைத்தது.

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் பாரேந்திரா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இது பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதியாகும். இங்கு எம்.எல்.ஏவாக இருந்த பஜ்ரங் பகதூர் தனக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அரசு காண்டிராக்ட் வழங்கினார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் காலியாக இருந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் 9,231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 64,878 வாக்குகள் பெற்றார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் 55,647 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் 41,247 வாக்குகள் பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். வெற்றி குறித்து சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், முதல்வர் அகிலேஷ் யாதவின் வளர்ச்சி திட்டங்களுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரம்தான் இந்த வெற்றி. பா.ஜனதாவை மக்கள் புறக்கணிக்க தொடங்கி விட்டார்கள் என்றார். இங்கு காங்கிரஸ் 2வது இடத்தை பிடித்து இருப்பது அக்கட்சிக்கு ஆச்சரியத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளதாக உள்ளூர் நிர்வாகி ஒருவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து