முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையை வீழ்த்தியது மும்பை - கேப்டன் டோணி பேட்டி

சனிக்கிழமை, 9 மே 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை: சென்னை அணி மும்பை இந்தியன்சிடம் வீழ்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் முதல் தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்தது. கேப்டன் டோணி 32 பந்துகளில் 39 ரன்களும், பவன் நெகி 17 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. இதன் மூலம் ஏற்கெனவே சென்னையிடம் தோற்றதுக்கு பதிலடி கொடுத்தது. மும்பை தரப்பில் பார்த்தீவ் பட்டேல் 32 பந்துகளில் 45 ரன்னும், லெண்டில் சிம்மன்ஸ் 31 பந்தில் 38 ரன்னும், அம்பதிராயுடு 19 பந்தில் 34 ரன்னும், பாண்டயா 8 பந்தில் 21 ரன்னும் எடுத்தனர்.

ஆட்டத்தின் 19-வது ஓவர் சென்னையின் தோலவிக்கு காரணமாக அமைந்தது. கடைசி 2 ஓவர்களில் அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை நெகிக்கு கேப்டன் டோணி கொடுத்தார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது. பாண்டயா 3 சிக்சர்களும், ராயுடு 1 சிக்சரும் அடித்தனர். நெகிக்கு அந்த ஓவரை கொடுத்தது டோணியின் மிகப்பெரிய தவறாகும். இதை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து டோணி கூறியதாவது: எங்களது வேகப்பந்து வீரர்கள் மோசமாக பந்துவீசினார்கள். மோகித் சர்மாவும், நெக்ராவும் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் 19-வது ஓவரை சுழற்பந்து வீரரான நெகிக்கு கொடுத்தேன். முதல் 3 ஓவரை அவர் நன்றாக வீசியதால் அவருக்கு இந்த ஓவரை வீச அழைத்தோம். ஆனால் இறுதியில் அந்த தந்திரமான முடிவு தவறாக அமைந்தது.

இந்த தொடரிலேயே வேகப்பந்து வீரர்கள் நன்றாக வீசினார்கள். அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் முதல் இடங்களில் உள்ளனர். போட்டியில் நெருங்கி வந்து தோற்பது இயல்பானது தான் எங்களது பீல்டிங் சிறப்பாக அமையவில்லை. இவ்வாறு டோணி கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் சந்தித்த முதல் தோலிவியாகும். ஒட்டுமொத்தமாக 11 ஆட்டத்தில் 4 வது தோல்வி ஏற்பட்டது. சென்னை அணி 12 வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை இன்று சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. இங்கு நடைபெறும் கடைசி போட்டி இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து