முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

73சதவீத இந்தியர்கள் கிராமங்களிலேயே வாழ்கிறார்கள்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2015      இந்தியா

புதுடெல்லி, இந்தியாவில் 73சதவீத மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள் என்று மத்தி யஅரசு வெளியிட்ட சமூக பொருளாதார மற்றும் ஜாதிய கணக்கெடுப்பு(எஸ்.இ.சி.சி) புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கிராமப்புறங்களில் வாழும் மக்களில்18.5சதவீதத்தினர் எஸ்.சி. சமூகத்தை சேர்ந்தவர்களாகவும் 11சதவீதத்தினர் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

இந்த புள்ளி விவர பட்டியலை நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்திரா சிங்கும் கூட்டாக நேற்று புதுடெல்லியில் வெளியிட்டனர்.கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வருமானமும் குறைவாக இருக்கிறது.74.5சதவீத கிராமபுற மக்களின் தனிநபரின் அதிக பட்ச வருமானம் மாதம் ஒன்றுக்குரூ5ஆயிரம் என்ற அளவிலேயே இருக்கிறது.8.3சதவீத கிராமப்புற மக்கள் மட்டுமே மாதம் ஒன்றிற்கு ரூ10ஆயிரம் என்ற அளவில் சம்பாதிக்கின்றனர்.

மத்திய அரசு வெளியிட்டுள்ள சமூக பொருளாதார புள்ளி விவரம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலை, அவர்களுக்கு உரிய நிலம், கல்வி தகுதி , பெண்களின் நிலை மாற்றுத்திறனாளிகள், கிராம மக்களின் பணி விவரம் அவர்கள் வைத்திருக்கும் சொத்து,கிராமப்புறங்களில் வசிக்கும் எஸ்.சிமற்றும் எஸ்.டிபிரிவினர் மற்றும் அவர்களது வருவாய் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.நாட்டில் உள்ள கிராமப்புற மக்களின் வருமானம் அவர்கள் சாப்பிடுவதற்கான செலவுத்தொகையாக இருக்கிறது.50சதவீத கிராம மக்களின்வருவாய் கூலி தொழிலில் இருந்தே கிடைக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள 56சதவீத மக்களுக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை.என அந்த பட்டியல் விவரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக பொருளாதார பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியமும் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து