முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிதி உதவி முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: இடி மின்னல் தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 24.4.2015 அன்று திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், குலையனேரி கிராமத்தைச் சேர்ந்த தங்கையாவின் மனைவி குருவம்மாள்; 27.4.2015 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், எழிலூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமியின் மகன் . வெள்ளைச்சாமி; கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், போத்திரமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்துவின் மகன் மாயவேல்; இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், ஏ.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த . பச்சைமாலின் மனைவி இந்திரா, . தேவராஜின் மனைவி அனுராதா; 3.5.2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், வத்தனாகோட்டை கிராமத்தைச் சேர்ந்த . பழனிவேலின் மனைவி கலைமணி; ஆகியோர் இடி, மின்னல் தாக்கியதால் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயர சம்பவங்களில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து