முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வேதே லட்சியம்: சாய்னா நெவால்

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி - ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் என்று பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த உலக பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், அடுத்த ஆண்டு ரியோடி ஜெனீரோவில் ஆகஸ்டு 5 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் உலக பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சாய்னா நேவால், இந்த மாதம் நடைபெறும் ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தான் பங்கேற்கவள்ளதாக தெரிவித்துள்ளார். ஜப்பான் ஓபன் போட்டியில் கரோலினாவை வீழ்த்த பயிற்சியாளர் விமல்குமார் மேற்பார்வையில் பெங்களூருவில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். தற்போதையை சூழ்நிலையில் எனக்கு எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன் முன்னணி வீராங்கனைகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார்.எல்லோரும் ஒலிம்பிக் போட்டிக்காக மிகவும் கடினமாக தயாராகுவார்கள். ரியோடிஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முயற்சிப்பேன். ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது கனவாகும்.கடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றேன். எனது வாழ்க்கையில் பயிற்சியாளர் விமல்குமார் ஒரு மீட்பர் போன்றவர். இந்த ஆண்டில் அவரிடம் பயிற்சி மேற்கொண்டதில் இருந்து நான் அதிக தன்னம்பிக்கை பெற்று இருக்கிறேன். தற்போது நான் பாதுகாப்பான நபரின் கையில் இருப்பதாக உணருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்