முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: ஒகேனக்கல்லில் குளிக்கத்தடை

வியாழக்கிழமை, 8 அக்டோபர் 2015      தமிழகம்
Image Unavailable

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்வதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில், பலத்த மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அருவிகளில் குளிக்க நேற்று 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக - தமிழக எல்லை பகுதியாக பிலுகுண்டுவில், நேற்று முன்தினம் மாலை சுமார் 23ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நேற்று காலை சற்று குறைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணைக்கு 7 ஆயிரத்து 299 கன அடி வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து, நேற்று முன்தினம் காலை 18 ஆயிரத்து 899 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை இது 20 ஆயிரத்து 970 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் காலை இது 69.57  அடியாக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 70.60 அடியாக உள்ளது.

கடந்த 2 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்துக்காக 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியதால், அணையில் வெளியே தெரிந்த நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ ஆலை கோபுரம் ஆகியன தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்