முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருப்பு விலை உயர்வு: நேரடி கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2015      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி - சந்தையில் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பருப்பு வகைகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவெடுத் துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண்மைத் துறை செயலர் சிராஜ் ஹூசைன் கூறியதாவது: விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, நவம்பர் மாதம் முதல் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இருப்பு வைக்க அரசு முடிவு செய்துள்ளது. தேவைப்பட்டால் இறக்குமதி செய்யவும் தயாராக உள்ளோம்.

இதன்படி, தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாபெட்) மூலம் 30 ஆயிரம் டன்னும் சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக கூட்டமைப்பு (எஸ்எப்ஏசி) மூலம் 10 ஆயிரம் டன்னும் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விலை ரூ.200-க்கு மேல் அதிகரித்துள்ளது. விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களில் 10 மாநிலங்களில் நடந்த சோதனையில் 35 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அருண் ஜேட்லி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்