முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து சோதனைக்கு செல்லாத மே.இ.தீவுகள் அணி வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டு தடை?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன் : 3 முறை ஊக்க மருந்து சோதனைக்கு செல்லாததால் மே.இ.தீவுகள் அணி வீரர் ரஸ்சலுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

மே.இ.தீவுகள்  அணியின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஆந்த்ரே ரஸ்சல். மே.இ.தீவுகள் அணி சமீபத்தில் 2-வது முறையாக டி-20 உலக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்கு வகித்தார். ரஸ்சல் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது அவர் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டியில் ஆடி வருகிறார்.

இதற்கிடையே ஊக்க மருந்து விதி முறைகளை ரஸ்சல் மீறியது தெரியவந்தது. மற்ற விளையாட்டு வீரர்களை போல கிரிக்கெட் வீரர்களுக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வீரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும் தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதை ரஸ்சல் மீறியுள்ளார்.  கடந்த 12 மாதத்தில் அவர் 3 முறை ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக உலக ஊக்க மருந்து தடுப்பு மையம் ரஸ்சலிடம் விசாரணை நடத்துகிறது. இந்த அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு வருகிற 20-ம் தேதி ஜமைக்காவில் இந்த விசாரணையை நடத்துகிறது. முதல் கட்ட விசாரணை மட்டுமே நடைபெறும். மற்றொரு நாளில் சாட்சி விசாரணை நடைபெறும். 3 முறை ஊக்க மருந்து சோதனைக்கு செல்லாதது ஊக்க மருந்து உட்கொண்டதற்கு சமமானது. இதனால் ரஸ்சலுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்