முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 7 மே 2024      உலகம்
Bangladesh 2024-05-07

Source: provided

டாக்கா : கடும் வெப்ப அலையால் கடந்து இரண்டு வாரங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக வங்கதேசத்தின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி கடுமையான வெப்ப அலை வீசுகிறது. 

கடந்து இரண்டு வாரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் 15 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 11 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

வங்காளதேச நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள மகுரா மாவட்டத்தில்தான் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது. இந்த மாவட்டத்தில் வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக இல்லாத வகையில் வங்காளதேசத்தின் பெரும்பாலான இடத்தில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், மதராஸ், தொழிநுட்ப கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்குள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரும் ஆண்டுகளிலும் வங்காளதேசத்தில் அதிக வெப்ப அலை வீசும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து