முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டணமில்லா பேருந்து கையடக்க பயண அட்டைகளை முதல்வர் ஜெயலலிதா மாணவ - மாணவியருக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில், 2016-2017-ம் கல்வி ஆண்டில் 31 லட்சத்து 11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக 5 பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை வழங்கினார்.

பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக, ஏழை எளிய மக்களின் குழந்தைகள் இடைநிற்றல் இன்றி கல்வி கற்கும் வகையில் கட்டணமில்லா கல்வி, சத்தான உணவு, விலையில்லா சீருடைகள், மடிக்கணினிகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், புத்தகப் பை, காலணிகள், மிதி வண்டிகள், ஊக்கத் தொகை, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சீரிய முறையில் செயல்படுத்திவருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு மாணவ, மாணவியர் பயனடைந்து வருகிறார்கள்.

கடந்த 2015-2016-ம் கல்வி ஆண்டில் 480 கோடி ரூபாய் செலவில் 28 லட்சத்து 5 ஆயிரத்து 578 மாணவ, மாணவியர் கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை பெற்று பயனடைந்தனர். 2016-2017-ம் கல்வியாண்டில் 504 கோடி ரூபாய் செலவில் 31லட்சத்து11 ஆயிரத்து 992 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் கட்டணமில்லா கையடக்க பேருந்துபயண அட்டைகளை பெற்று பயனடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago