முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கபடி போட்டி: ஹாட்ரிக் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி – தலைவர்கள் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 23 அக்டோபர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உலகக்கோப்பை கபடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி ஹாட்ரிக் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, விளையாட்டு வீரர்கள் சச்சின், ரெய்னா, அமித் மிஸ்ரா, பாலிவுட் நட்சத்திரங்கள் அபிஷேக் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகக்கோப்பை கபடி போட்டி நடைபெற்றது. லீக் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டிகளுக்குப் முடிந்த நிலையில் இந்தியா, ஈரான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரவு 7.55 மணிக்கு நடந்த இந்த போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.

தொடர்ந்து இரண்டு முறை பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஈரான் அணி தொடக்கத்தில் கடும் நெருக்கடி தந்தது. இதனால் முதல் பாதியில் ஈரான் 18-13 என முன்னிலைப் பெற்றது. இரண்டாம் பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா. இறுதியில் இந்தியா 38-29 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

உலகக்கோப்பை கபடி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உறுதிப்பாட்டுடன், அசாதாரணமான திறன்களை இந்திய அணி வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, வி.கே.சிங், ராம்விலாஸ் பஸ்வான், விஜய் கோயல் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேபோல், பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அபிஷேக் பக்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் சச்சின், சுரேஷ் ரெய்னா, அமித் மிஸ்ரா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்