முக்கிய செய்திகள்

மழைக்காலங்களில் நோய்களை பரப்பிடும் கொசுக்களை விரட்டியடித்திடும் சில இயற்கையான வழிமுறைகள்

செவ்வாய்க்கிழமை, 8 நவம்பர் 2016      மருத்துவ பூமி
mosquito(N)

மழைக்காலங்களில் மலேரியா,டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாகிடும் கொசுக்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் விரட்டியடித்திட இயற்கை முறையிலான சில எளிய வழிமுறைகள் இதோ:

1.சிறிதளவு நொச்சி இலையை பதமாக காயவைத்து கொசுக்;கள் அதிகம் நடமாடுமிடத்தில் புகை போட்டால் கொசுக்கள் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிவிடும்.

2.வேப்பிலை,வெங்காயத்தோல்,மஞ்சள்,பூண்டுத்தோல் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வீட்டுக்குள் புகைமூட்டம் போட்டால் கொசுக்கள் தங்காது வெளியேறிவிடும்.

3.எலும்மிச்சம்பழத்தை பாதியாக பிளந்து அதன்மேல் ஏராளமான கிராம்புகளை செருகி வீட்டில் கொசுக்கள் அதிகமாக நடமாடும் இடத்தில் வைத்தால் இந்த வாசனை வரும் பகுதியில் கொசு தலைவைத்து படுக்காது.

4.கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் சீசனில் பாகற்காய் அதிகம் சாப்பிட்டால் உடலிலிருந்து வெளிNறும் வியர்வை மிகவும் கசப்பாக இருப்பதால் கொசு நமது அருகில் வரவே வராது.

5.புதினா அல்லது கறிவேப்பிலை இலைகளை கசக்கி வீட்டின் மூலைகளில் வைக்கலாம்,அல்லது தண்ணீர் கலந்து இந்த கலவையை வீடு முழுவதும் தெளித்தால் கொசுக்களின் அட்டகாசம் குறைந்திடும்.

6.வெங்காயம் அல்லது பூண்டை விழுதாக அரைத்து உடலில் பூசிக் கொண்டால் கொசுக்கள் நமது அருகில் வராது.

7.இவற்றுக்கெல்லாம் மேலாக துளசி,ஜெரேனியம் மற்றும் நொச்சி செடிகளின் வாசனை கொசுக்களுக்கு அலர்ஜி என்பதால் வீட்டைச் சுற்றிலும் மற்றும் கதவு,ஜன்னல் பகுதிகளில் இந்த செடிகளை வளர்த்தால் கொசுக்கள் வீட்டிற்குள் வருவதை தடுத்திடலாம். இவற்றுக்கெல்லாம் மேலாக நாம் வசிக்கும் இடத்தில் தண்ணீர் தேங்கிடாமல் தூய்மையாக வைத்துக் கொண்டாலே பெரும்பாலான கொசுக்களை ஒழித்ததற்கு சமமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: