முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்றங்களில் தேசிய கீதம் கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - திரையரங்குகளையடுத்து நீதிமன்றங்களிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அஷ்வனி குமார் உபாத்யாய் தாக்கல் செய்திருந்த மனுவில் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கும் முன்பாக அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். 
விசாரணைக்கு வந்த மனு:

இந்த மனு  நேற்று தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு வந்தபோது, “தவறோ, சரியோ, எங்கள் உத்தரவு (திரையரங்குகளில் தேசிய கீத உத்தரவு) அதிகமாக நீட்டிக்கப்படக்கூடாது, மனுதாரர் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்” என்றனர்.  உச்ச நீதிமன்றம் தனது நவம்பர் 30 உத்தரவில் திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
 கதவுகள் மூடியிருக்க வேண்டும் :

மேலும் தேசிய கீதம் பாடும்போது தேசியக் கொடியை திரையில் காட்ட வேண்டும் எனவும் இது குறித்த உத்தரவும் ஒருவாரத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியிருந்தது. மேலும் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடும்போது கதவுகள் மூடியிருக்க வேண்டும், ஏனெனில் அப்போதுதான் தொந்தரவுகளையும் இடையூறுகளையும் தவிர்க்க முடியும் என்று உத்தரவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்