முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      அரியலூர்
Image Unavailable

அரியலூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் எ.சரவணவேல்ராஜ் நேரில் ஆய்வு

அரியலூர் : அரியலூர் மாவட்டடத்தில் கனரக வாகனங்கள் வேகத்தினை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகளிலும், தேசிய நெடுஞ்சாலையில் இணையும் கிராமப்புறச் சாலை முகப்புகளிலும்; வேகத்தடை அமைக்கப்பட்டதையும், புதிதாக வேகத்தடை அமைத்திடவும், சாலையோரங்களிலுள்ள முட்புதற்களை அகற்றுவதற்கும் மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், நேற்று (20.10.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுக்குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :- அரியலூர் மாவட்டத்தில் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால், இவ்வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும், விபத்து இல்லா பயணத்தை உறுதிசெய்யும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் - ஜெயங்கொண்டம் தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணாநகர் நேருந்துநிறுத்தம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், விளாங்குடி ஆகிய இடங்களில் புதிதாக வேகத்தடை அமைக்கவும், தேசி நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் உள்ள முட்புதற்களை அகற்றவும், வி.கைகாட்டியிலுள்ள பாலத்தின் இருபுறங்களிலும் பாதுகாப்பு தடுப்பு சுவர் அமைக்கவும், தேசிய நெஞ்சாலைத்துறை பொறியாளர் மற்றும் வளர்ச்சித்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் எ.சரவணவேல்ராஜ், தெரிவித்துள்ளார். இவ்வாய்வின்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (அரியலூர்) கபிலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago