முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்தா புயலுக்கு பிறகு தற்காலிக மருத்துவ முகாம்களில் 38,900 பேருக்கு சிகிச்சை

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி:வர்தா புயலுக்கு பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தற்காலிக மருத்துவ முகாம்களில் 38,900 பேர் பயனடைந்துள்ளதாக கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அடுத்த மல்லியங்குப்பத்தில் புதன்கிழமை நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டப் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக கும்மிடிப்பூண்டி அடுத்த சோழவரம் ஊராட்சி ஒன்றியம் ஆரணி அருகே மல்லியங்குப்பம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கால்நடை மருத்துவ முகாம், தூய்மைப் பணி ஆகியவற்றை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியானது கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி , திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. பொன்னேரி எம்.எல்.ஏ சிறுணியம் பி.பலராமன் முன்னிலை வகித்தார். மருத்துவ முகாமில் பேசிய மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் தெரிவிக்கையில் திருவள்ளுர் மாவட்டத்தில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் இருக்க 14.12.2016 முதல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் 46 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இம்முகாமின் மூலம் இதுவரை 38,900 நபர்கள் பயனடைந்துள்ளார்கள். பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 344 செவிலியர் பயிற்சி மாணவர்கள் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் 56 குழுக்கள் மூலம் 492 நீர்நிலைகளில் குளோரின் கலக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த 19 புகைத்தெளிப்பு குழுக்கள் மூலம் 106 பகுதிகளில் புகைத்தெளிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள 526 கிராம ஊராட்சிகள் முழுமையாக சுத்தம் செய்யும் பணி 5 நாட்கள் (19.12.2016 முதல் 23.12.2016 வரை) நடைபெற்று வருகிறது. இதில் நிலவேம்பு குடீநீர், உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்படுகிறது.சுகாதார துறையின் மூலமும் நடத்தப்படும் முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார், கால்நடைகளுக்காக மல்லியங்குப்பத்தில் நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் கால்நடைகளுக்கு தொண்டை அடைப்பான் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, கோழிகழிச்சல் தடுப்பூசி, கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் சினைப்பரிசோதனை நடத்தப்பட்டதோடு, பால் உற்பத்தியை அதிகரிக்க தாது உப்பு கலவை, பசுந்தீவனங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இம்முகாமில் சோழரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கார்மேகம், ஆரணி பேரூர் அதிமுக செயலாளர் தயாளன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்