தினவட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி, தண்டல் முறைகளில் பணம் கடன் கொடுப்போருக்கு 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் : தினவட்டி, மணிநேர வட்டி, கந்துவட்டி, மீட்டர் வட்டி, தண்டல் ஆகியவை தமிழ்நாடு பணம் கடன் கொடுப்போர் சட்டத்தின் பிரிவு 7-ன் கீழ் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டியை விட கூடுதலானது எனவும், இதனை மீறுபவர்களுக்கு தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச்சட்டப்பிரிவு 4-ன் கீழ் 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையுடன் ஷ.30,000- வரை அபாரதமும் விதிக்கப்படும் என்றும் நாகப்பட்டினம், மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்துள்ளார். மேலும், கந்துவட்டி தொடர்பாக, காவல் துறையினரால் பதிவு மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் அதன் தீர்வுகளை ஆய்வு மேற்கொள்ளவும் மற்றும் வரையறுக்கப்பட்ட வட்டி விகிதங்களுக்கு மேல் கடன் வழங்குவோர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும், காவல்துறையினர் இச்சட்டத்தினை நடைமுறைப்படுத்தவும் வழிவகைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கந்து வட்டி தொடர்பான பிரச்சினைகளை காவல் துறையினர் மட்டும் அல்லாமல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்(தலைவர்) 04365 253085, மாவட்ட வருவாய் அலுவலர் (உறுப்பினர் செயலர்): 04365 253050, காவல் கண்காணிப்பாளர், நாகப்பட்டினம்: 04365 242999, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது): 04365 253048 ஆகியோர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான குழுவினரிடமும், வருவாய் கோட்ட அலுவலர் நாகப்பட்டினம் : 04365 248833 , மயிலாடுதுறை: 04364 222033, .வட்டாட்சியர்(உறுப்பினர் செயலர்) நாகப்பட்டினம் : 9445000616, கீழ்வேளுர்: 9445000618, திருக்குவளை: 9445000619, வேதாரண்யம்: 9445000617, மயிலாடுதுறை: 9445000620, சீர்காழி: 9445000622, தரங்கம்பாடி: 9445000621, குத்தாலம் 8903060935, .துணை காவல் கண்காணிப்பாளர் (உறுப்பினர்): நாகப்பட்டினம்: 9498189802, வேதாரண்யம்: 9443358777, சீர்காழி: 9444473238, மயிலாடுதுறை: 9498127426 உள்ளிட்ட வட்ட அளவிலான குழுவினரிடமும் தொலைபேசி வாயிலாகவோ, நேரிலோ பொது மக்கள் தங்களது புகார்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்பொருட்டு தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: