கால்நடை பராமரிப்பு துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு நேர்காணல் : தி.மலை ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிககு வருகிற 26ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடைபெறவுள்ளதாக தி.மலை ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வேலூர் கோட்டை அருகே நேதாஜி விளையாட்டு அரங்கில் வருகிற 26ந் தேதி முதல் 30ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனித்தனியே அஞ்சல் மூலம் அனுப்பபட்டுள்ளது. அழைப்பாணையில் குறிப்பிட்டு நாளில் விண்ணப்பதாரர்கள் பங்கேற்க வேண்டும். நேர்முக அழைப்பாணை கிடைக்காதவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற வளைதலத்தில் இருந்து இன்று 22ந் தேதியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக அழைப்பாணைகளை நாளை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மண்டல இணை இயக்குநர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு நடைபெறும் வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: