முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு : கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      கடலூர்

கடலூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2016-17-ம் நிதியாண்டில் கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்படுவதற்கான 3-வது பயனாளிகள் தேர்வு கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கூட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் 4 பயனாளிகள் முந்திரி பதப்படுத்தும் தொழில், சிற்பத் தொழில், அரிசி பதப்படுத்துதல் மற்றும் ஆயில் மில் போன்ற தொழில்களுக்கு தேர்வு செய்யப்பட்டு ரூ.142.32 லட்சம் மதிப்பிலான கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இதுவரை 2016-17ம் நிதியாண்டில் இத்திட்டத்தின்கீழ் ரூ.792.32 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்க 22 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். தொழில் வணிகத்துறையின்கீழ் இயங்கும் கடலுhர் மாவட்ட தொழில் மையம் படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தரவும், தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ஒரு வழிகாட்டி மையமாகவும் செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின் பேரில் 2012 – 13 முதல் செயல்பட்டு கொண்டிருக்கும் திட்டமே புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனமேம்பாட்டு திட்டம் ஆகும். இத்திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வங்கிகள் / நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் மான்யத்துடன் (ரூ.25 இலட்சத்திற்கு மிகாமல் ) கூடிய கடனுதவி பெறவும் 3 சதவீதம் பின்முனை வட்டி மான்யம் பெறவும் வழி வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் 50 விழுக்காடு மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பங்களை றறற.அளஅநடிடேiநே.வn.படிஎ.in/நேநனள இணைய வலைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலுhர் அவர்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தேர்வுக் கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராஜகணேஷ், முன்னோடி வங்கி மேலாளர் (இந்தியன் வங்கி) ஆண்ட்ரு அய்யாசாமி, உதவி பொது மேலாளர் (நபார்டு) சங்கர், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி மேலாளர்கள், தாட்கோ மேலாளர் ராஜலட்சுமி, மற்றும் சிறு குறு சங்கத் தலைவர் எஸ்.அசோக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago