கோத்தகிரியில் மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      நீலகிரி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜெ.கலைச்செல்வியின் தலைமையில் நாளை(24_ந் தேதி) காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கோத்தகிரி வட்டம் ராம்சந்த் அஞ்சல் நிலையம் அருகேயுள்ள கோத்தகிரி நகர உதவி செயற்பொறியாளர் இயக்குதலும், பேணிதலும் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அப்பொழுது நகரம், கோத்தகிரி, வெஸ்ட்புரூக், அரவேனு, கட்டபெட்டு, கிராமியம் கோத்தகிரி, நெடுகுளா மற்றும் கீழ்கோத்தகிரி பிரிவுகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் மின்சாரம் சம்பந்தப்பட்ட குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவிக்கலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் ஜெ.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: