முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாய்கால் பகுதிகளில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும்.

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள கூகலூரில் கொடிவேரி  அணைக்கட்டு  திட்டம் டி-9 தடபள்ளி முறைநீர் பாசன விவசாயிகள் சபை பொதுக்குழு மற்றும் விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம் பாசன சபை அலுவலகத்தில் தலைவர் என்.கே.மாரப்பன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குகன் வரவேற்று பேசினார், பொருளாளர் டி.பி.வீரப்பன் வரவு செலவு அறிக்கை வாசித்தார். என்.எம்.முத்துசாமி, பி.சி.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

2015-2016 வரவு-செலவு பாசனசபை செயல்பாட்டு விவரங்களை சமர்ப்பித்து கோபி பதிவாளர் அலுவலகத்தில் சபையினை புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

தடபள்ளி பாசன பகுதிகளில் தற்போது உள்ள வறட்சியால் தரிசாக உள்ள நிலங்களுக்கும், கரும்பு, வாழை, மஞ்சள் பயிர்களுக்கு பிரதம மந்திரியின் புதிய காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

கொடிவேரி பாசன திட்ட நிலங்களில் உள்ள ஆழ்குழாய், திறந்தவெளி கிணறு ஆகியனவற்றுக்கு வறட்சி நிலையை கருத்தில் கொண்டு சிறப்பு முன்னுரிமை திட்டத்தின் கீழ் மின் இணைப்பு கொடுக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடிவேரி, தடபள்ளி பாசன திட்ட நிலங்களில் நிலுவையில் உள்ள வறட்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ள மஞ்சள், கரும்பு, வாழை, தென்னை பாக்கு பயிர்களை காப்பாற்ற உயிர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

பாரதப்பிரதமர் அறிவித்துள்ள புதிய ரூபாய் நோட்டுக்கள் மாற்றும் திட்டத்தை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் வரவு-செலவு, பயிர் கடன், நகைக்கடன், வாங்கியுள்ள நிலையில் கிராமபுற விவசாயிகள் பயன் பெறும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் வரவு-செலவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தடபள்ளி பாசன திட்டத்தில் உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்துறை மூலம் அளவீடு செய்து எல்லைக் கற்கள் நட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளரை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

ஒடத்துறை, அனந்த சாகரம் குளங்களில் விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரை கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

          கூட்டத்தில் பயிர்காப்பீடு பற்றிய விளக்க கையேட்டை கூகலூர் உதவி வேளாண்மை அலுவலர் எஸ்.ராஜா வெளியிட்டார். பொறியாளர் ஏ.சி.காமராஜின் நீர் வழி சாலை திட்டம் பற்றிய தொகுப்பை கரும்பு வளர்ப்போர் சங்க செயலாளர் பா.அ.சென்னியப்பன் வெளியிட்ட கூகலூர் கிளை வாய்க்கால் தலைவர் என்.எம்.முத்துசாமி, டி.சி.சின்னதுரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

          கூட்டத்தில் மாவட்ட உழவர் விவாதகுழு செயலாளர், பா.மா.வெங்கடாசலபதி மஞ்சள் விவசாயிகள் சங்க செயலாளர் கடுக்காம்பாளையம் எஸ்.ஏ.பெருமாள் பயிர்காப்பீடு திட்ட பிரதிநிதி எம்.மோகன்குமார் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஆர்.வெங்கிடுசாமி, கே.எஸ்.செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள். டி-9 பாசனசபை நிர்வாகிகள் துணைதலைவர் சி.எம்.நஞ்சப்பன் ஈ.விவேகானந்தன் உட்பட்ட 80க்கும் மேற்பட்ட பாசன சபை விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைசெயலாளர்  மதியழகன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago