திண்டுக்கல் மாவட்டத்தில் அனைவரும் ஆதார் எண்களை குடும்ப அட்டையுடன் இணைக்க கலெக்டர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 24 டிசம்பர் 2016      திண்டுக்கல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் என்.பஞ்சம்பட்டி, போடிகாமன்வாடி ஆகிய  கிராமங்களில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குடும்ப அட்டையுடன் ஆதார்  எண்களை இணைக்கும் பணி நடைபெற்றதை, மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பொது விநியோகத்திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கி சேவை தரத்தினை  மேம்படுத்தும் வகையில் தமிழக அரசால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 திண்டுக்கல் மாவட்டத்தில்  01.11.2016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பயன்பெறும்  பயனாளிகளின் விபரங்களை சரிபார்ப்பதற்காக களப்பணியாளர்களால் வீடு, வீடாகச்  சென்று கள ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இக்கள ஆய்வுப் பணியில் 1086 பணியாளர்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆய்வுப்பணியின் போது தேசிய உணவு பாதுகாப்புச்  சட்ட பயனாளிகளை அடையாளம் காண்பதில் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தகுதியான நபர்களை மட்டும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும், தகுதியில்லாத நபர்கள் இந்த பட்டியில் சேர்க்க கூடாது எனவும், பயனாளிகளை  அடையாளம் காண்பதில் தீவிர கவனம் செலுத்தி பயனாளிகளின் விபரங்கள் சரியாக தணிக்கை செய்ய வேண்டும்;.

களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியல்கள் 1,2 மற்றும் 3 ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தணிக்கை பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆதார் பதிவு செய்யாதவர்கள் விபரத்தை வீட்டுத்தணிக்கையின் போது துல்லியமாக கண்டறிந்து திருமணம் செய்து வெளியூர் சென்றவர்கள், இறந்தவர்கள் விபரங்களை சேகரித்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் குடியிருந்து இதுவரை ஆதார் எடுக்காதவர்களை உடனடியாக ஆதார் அடையாள அட்டை எடுத்து  நியாய விலைக்கடைகளில் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் வினய் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன், ஆத்தூர்  வட்டாட்சியர் சிவசங்கரன், தனிவட்டாட்சியர் (பறக்கும்படை) இராஜகோபால், ஆத்தூர்  வட்ட வழங்கல் அலுவலர் முத்துராமன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள்  ஆகியோர் உடனிருந்தனர்.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: