முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் கட்டணங்களை செலுத்த ஸ்வைப் மெசின் பயன்பாட்டுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      திருச்சி
Image Unavailable

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டணத்தை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்த ஸ்வைப் மெசின்கள் வசதி நேற்று முன் தினம்;(23ம்தேதி) முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது நிலவி வரும் சில்லறை தட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் கோவிலில் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையிலும், மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனை வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் ஸ்வைப் மெசின்கள் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி நேற்று முன் தினம் (23ம்தேதி) முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

 

இதற்கான துவக்க நிகழ்ச்சி கோவில் கொடிமரம் அருகே நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், ஸ்ரீரங்க நாராயண ஜீயர், இந்தியன் வங்கி துணைப்பொதுமேலாளர் செல்வராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த ஸ்வைப் மெசின்கள் கோவில் அலுவலகம், பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, தகவல் மையம், யாத்ரீகர் நிவாஸ் உள்ளிட்ட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

 

இதில் தரிசனம், அபிN~க கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், நன்கொடை உள்ளிட்ட கட்டணங்களை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தலாம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்