முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டத்தில் 2676 பயனாளிகளுக்கு ரூ.14 .74 கோடி மதிப்பிலான திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதி

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கோவை

 

                திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில்  2015-16-ம் ஆண்டிற்கான பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தலா 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   தலைமையில் நேற்று (26.12.2016) தொடங்கி வைத்தார்.

தாலிக்கு தங்கம்

           திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், அவிநாசி, பல்லடம், பொங்கலூர், தாராபுரம், மூலனூர், வெள்ளகோவில், காங்கேயம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஊத்துக்குளி, குண்டடம் மற்றும் குடிமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சார்ந்த பட்டம் மற்றும் பட்டைய படிப்பு முடித்த 1891  பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.50,000/- வீதம் ரூ.9,45,50,000/- மும், மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்த 785 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக தலா ரூ.25,000/- வீதம் ரூ.1,96,25,000/- மும் என ரூ.11,41,75,000/- மதிப்பிலான திருமண நிதியுதவியும் மற்றும் 2676 பயனாளிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு தலா 4 கிராம் தங்கம் வீதம் ரூ.3,33,14,472/- மதிப்பில் 10704 கிராம் தங்கமும் என ரூ.14,74,89,472/- மதிப்பீட்டிலான திருமணநிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கத்தினையும் மாவட்ட கலெக்டர்  வழங்கினார்கள்.இந்நிகழ்வின்போது மாவட்ட சமூக நலத்துறை  அலுவலர் பூங்கோதை  உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்