அண்டப்பட்டு கிராமத்தில் வரும் 4ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      விழுப்புரம்

 

விழுப்புரம்,டிச.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் அண்டப்பட்டு கிராமத்தில் வரும் 4ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தலைமையில் நடைபெறும்.இது குறித்து கலெக்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜனவரி 2017ம் மாதத்தின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருகின்ற 04.01.2017ஆம் தேதி புதன்கிழமை திண்டிவனம் வட்டம் அண்டப்பட்டு கிராமத்தில் நடைபெற உள்ளது.எனவே, அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வரும் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கை மனுக்களை முன்னதாகவே அளித்து, பயனடைய வேண்டும் என கலெக்டர்இல.சுப்பிரமணியன்,  தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: