மூன்றாம் பருவ நோட்டு, புத்தகங்கள் தயார் பள்ளிகளில் முதல் நாளிலேயே வினியோகம்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      ஈரோடு

 

அரசு பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே, வினியோகிக்கும் வகையில், நோட்டு, புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டன. பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சமச்சீர் கல்விமுறையில் இரண்டாம் பருவம் நிறைவு பெற்றுள்ளது. மூன்றாம் பருவம் ஜனவரி, 2ல் துவங்குகிறது. இதற்கான பாட புத்தகங்களை மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்றாம் பருவத்தில் ஆறாம் வகுப்புக்கு, 13 ஆயிரத்து, 907, ஏழாம் வகுப்புக்கு, 14 ஆயிரத்து, 225, எட்டாம் வகுப்புக்கு, 14 ஆயிரத்து, 863, ஒன்பதாம் வகுப்புக்கு, 23 ஆயிரத்து, 255 புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

 

அதேசமயம் இவர்களுக்கு தலா, ஐந்து நோட்டுகள் வீதம், இரண்டு லட்சத்து, 80 ஆயிரம் நோட்டுகள் வினியோகிக்க வேண்டும்.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது அரையாண்டு விடுமுறை முடிந்து, ஈரோடு, கோபி என இரண்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் பள்ளி துவங்கும், முதல் நாளிலேயே மூன்றாம் பருவ பாட புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டு விடும். ஏற்கனவே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: