ஊட்டியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாட்டம்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      நீலகிரி

 ஊட்டியில் ஆஞ்சநேயர் ஜெயந்தி தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாடுமுழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆஞ்சநேய சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதேபோன்று அருள்மிகு வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெண்ணெயினால் அலங்காரம் செய்யப்பட்டு வடைமாலை சாத்தி, சிறப்பு பிரசாதங்கள் படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

வண்டிச்சோலை ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வடைமாலை சாத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இச்சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேய சுவாமியின் அருளை பெற்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: