முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த ஆண்டு ஜல்லிகட்டு நிச்சயமாக நடைபெறும் மத்திய அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      தூத்துக்குடி

திருச்செந்தூர்,

 

திருச்செந்தூர் வந்திருந்த மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோவிலில் சுவாமி கோவிலுக்கு சென்று மூலவர், சண்முகர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள உரையானது மிகப்பெரிய நம்பிக்கையை அனைவருடைய மனதிலும் எழுப்பியுள்ளது. நமது நாட்டில் இருக்க கூடிய சாதாரண பாமர மக்களுடைய வாழ்க்கை ஒளி பெற வேண்டும். சாதரான மக்களையும் இந்த நாட்டின் பொருளாதாரத்தோடு இனைத்து அழைத்து செல்ல வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையோடு பிரதமர் மிக பெரிய பொருளாதார மாற்றத்தை உருவாக்க கூடிய நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி நகர்புறம் மற்றும் கிராமபுரத்தில் வாழுகின்ற மக்கள் வீடுகள் கட்டுவதாக இருந்தாலும் சரிதான், விவசாயிகளுடைய கடனாக இருந்தாலும் சரிதான், சிறு தொழீல் செய்ய கூடிய கடனாக இருந்தாலும் சரிதான், இவற்றிற்கு அளவை உயர்த்தியதோடு கூடி வட்டி விகிதத்தை குறைத்து ஒவ்வொரு வீட்டிலும் ஒளியேற்றக்கூடிய நடவடிக்கையை எடுத்துள்ளார். விவசாயிகள் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகள் தைரியமாக இருக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு பக்கபலமாக இருக்கிறது. சென்ற ஆண்டின் நிதி நிலை அறிக்கை முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனை அடிப்படையாக கொண்டு பிரதமர் உருவாக்கியிருந்தார்.

 

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். தற்போதும் கூட நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு பொங்கல் விழாவில் ஜல்லிகட்டு நிச்சயமாக நடைபெற வாய்ப்புகள் உண்டு. பிரதமர் நரேந்திர மோடி ஒரு நடவடிக்கையை துணிச்சலாக எடுக்கின்றார் என்று சொன்னால், அதற்கு முன்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி இருப்பார்கள். அதன் அடிப்படையில்தான் இந்த கருப்பு பணத்தை ஒழிக்கின்ற நடவடிக்கை வந்துள்ளது. மக்களுக்கு தேவையான பணத்தை கொடுப்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. கொஞ்ச காலம் ஏடிஎம் செயல்படுவதில் சிரமங்கள் இருந்தது- உண்மைதான். இன்று எல்லா ஏடிஎம் செயல்பட ஆரம்பித்துவிட்டன. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர் கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக எது வேண்டுமானலும் சொல்வார்கள்.

 

நாளை தமிழக முதல்வரை சந்திக்க உள்ளேன். அப்போது, கிழக்கு கடற்கரை சாலை அமைப்பது, மதுரையில் 5 ஆயிரம் கோடி ரூபாயில் ரிங் ரோடு அமைப்பது குறித்தும், தமிழகத்தில் உள்ள பல சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக ஏற்று நடத்த விருப்பத்தை தெரிவிப்பது. குளைச்சல் வர்த்தக துறைமுகம் கொண்டுவரக்கூடிய வகையில் மாநில அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைக்க இருக்கின்றேன் என்று கூறினார். அப்போது அவருடன் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமேஸ்வரன், முத்துக்குமார், மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் நெல்லையைம்மாள், உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்