முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பாதுகாப்பு படையின் இணையதளம் : பாகிஸ்தானை சேர்ந்த நபர்களால் முடக்கம் தீவிரவாத தடுப்பு படையினர் தீவிர விசாரணை

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தானை சேர்ந்த நபர்களால் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிரவாத தடுப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டதுடன், பிரதமர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் எனும் இணையதள ஊடுருவல் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

www.nsg.gov.in -என்ற இணையதளம் முடக்கியது நேற்று கண்டறியப்பட்டவுடன், உடனடியாக தீவிரவாத தடுப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இணையத்தின் முகப்பு பக்கத்தில் ஊடுருவிய நபர்கள், அலோன் இன்ஜெக்டர் என தங்களை அடையாளம் காட்டியிருந்தனர்.அவர்கள் ஜம்மு-காஷ்மீர் குறித்தும் மற்றும் தேசத்திற்கு எதிரான பல்வேறு அவதூறு கருத்துகளையும் இணையத்தில் பதிவிட்டிருந்தனர்.

தற்போது, இணையதள பக்கத்தை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீவிரவாத தடுப்பு மற்றும் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் அமைப்பாக கடந்த 1984ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago