எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : தங்கம் விலை நேற்று ஒரே நாளில் 6.3% சரிந்தது. இதேபோல் ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி விலையும் நேற்று 8.7% சரிவை சந்தித்தது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரம் என்ற உச்சத்தையும் கடந்தது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,700-க்கும் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனையானது.
நேற்று வெள்ளி விலையும் குறைந்து விற்பனையானது. கிராமுக்கு இரண்டு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்துக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், நேற்று சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. ஒரே நாளில் தங்கம் விலை 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் சுமார் $4,082-54,143 வரை வர்த்தகம் ஆனது. இது 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
அமெரிக்கா-சீனா இடையேயான புவிசார் அரசியல் பேச்சுவார்த்தை சுமூகமாக மாறியதாலும், முதலீட்டாளர்கள் தங்கம் மூலம் கிடைத்த பங்குகளை விற்று லாபம் ஈட்ட முடிவுசெய்ததாலும், ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தில் எதிர்பார்த்த மாற்றத்தை செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதால் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியதாலும் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சரிந்து கொண்டிருக்கும் வெள்ளி நேற்று 8.7% சரிவை சந்தித்து சுமார் $47.89-$48.40 ஒரு அவுன்ஸ் என்ற நிலையை அடைந்தது. இது பிப்ரவரி 2021-க்குப் பிறகு மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


